அத்தியாயம் 2

by 02:38 0 comments
படிப்பாளிகள் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து ஓடுகிற பயந்தாங்கொள்ளிகள் என நினைத்தேன். அவரிடம் சொன்னேன்.
நான் நினைக்கிறபடி வாழ்ந்து விடுபவன். கற்பனையில் வாழ்ந்து விட்டு சிக்கலில்லாமல் தப்பிக்கிறவன் அல்ல என்றேன். அவர் அது அப்படி அல்ல என்றார். “எழுதுகிறவர்கள் தாம் மாட்டிக் கொள்கிறார்கள். வரலாற்றில் எத்தனையோ உதாரணங்கள். செய்கிறவர்கள் தப்பிக்கிறார்கள். நானே ஒரு உதாரணம். நான் முதன்முதலில் ஒரு புத்தகம் எழுதியதற்காகத் தான் கைது செய்யப்பட்டேன்என்றார் லூயி.
அவர் ஒரு பைத்தியக்காரன் என்று அப்போதே புரிந்தது. நான் கேட்டேன்அப்படி என்ன எழுதினீர்கள்?”
என் வாழ்க்கையை பற்றி, என் நம்பிக்கைகளைப் பற்றி. குறிப்பாக நான் காதலித்த சில சிறுவர்களைப் பற்றி


அப்போது எனக்கு அது சரியாகத் தோன்றியது. எங்கள் தரப்பு நியாயத்தை எத்தனை நாள் தான் மூடி மறைப்பது. மாற்றுப்பாலுறவுக்காக ஒரு இயக்கம் ஆரம்பிக்க நினைத்தேன். எங்களது தலைமறைவு வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும் என நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்த புத்தகத்தை படிக்காமலே என்னை குற்றவாளி ஆக்கினார்கள். என்னை ராட்சதனாக காட்டி பெரும் ஊர்வலங்கள் நடந்தன. உரிமைப் போராளிகள் என சொல்லிக் கொள்கிற பலரும் என்னை வேட்டையாட கிளம்பினார்கள். அப்போது காணாமல் போன கொல்லப்பட்ட சிறுவர்களைப் பற்றின வழக்குகளில் என்னை பிரதான குற்றவாளி ஆக்கும்படி காவல்துறைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள். நான் கருத்துரிமைக்காக போராடினேன். ஆனால் நான் எழுதின ஒரு உண்மைக்காக என்னை கைது செய்தார்கள். இதை நான் தனிப்பட்ட முறையில் ஆயிரம் பேரிடம் சொல்லி இருக்கிறேன். ஒன்றுமே ஆகவில்லை. நிக்கின் அப்பாவிடம் கூட நேரடியாக சென்று நானும் அவரது மகனும் காதலிக்கிறோம் என சொன்னேன். அவர் என்னை அடித்து துரத்தினார். நிக்கின் படிப்பை நிறுத்தி, என்னை பள்ளிக்கூட வேலையில் இருந்து நீக்க செய்தார். அவ்வளவு தான். அப்போதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. என் நண்பர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். நானாக ஒரு குழந்தையை துன்புறுத்த மாட்டேன் என அவர்களுக்கு தெரியும். பிடோபைல்கள் என்றால் கற்பழிக்கிறவர்கள் என இந்த சமூகம் நினைக்கிறது. என் நண்பர்கள் அப்படி நினைக்கவில்லை. என்னை தங்கள் குடும்பத்தோடு ஒன்றாக பார்த்துக் கொண்டார்கள். தம் குழந்தைகளை என்னோடு பயமின்றி பழக விட்டார்கள். நான் செய்த ஒரே தவறு அந்த புத்தகம் எழுதினது. அதனால் தான் கைதானேன். என் நண்பர்களும் என்னை வெறுத்து ஒதுக்கினார்கள். என் வேலையை, வாழ்க்கையை, சொந்த நாட்டை எல்லாம் இழந்தேன்.”
ஆமாம் அது உன் தப்பு தான்.”
உம்
ஆனால் எங்க ஊரில் அப்படி எல்லாம் நடப்பதில்லை. இதே புத்தகத்தை நீ தமிழில் எழுதி இருக்கலாம். யாருக்கும் தெரியாது.”
ஏன்?”
நாங்கள் பரீட்சைக்கு சம்மந்தமில்லாத புத்தகங்களை படிக்க மாட்டோம்.”
என் புத்தகம் கூட ஒன்றும் அவ்வளவாக படிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட அத்தனை காப்பிகளையும் அழித்து விட்டார்கள். என்னிடம் கூட ஒரு பிரதி இல்லை. எனக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுகையில் அரசாங்க தரப்பு என்னுடைய ஒரே பிரதியை கைப்பற்றிக் கொண்டார்கள்.”
யார் அழித்தது?”
என்னுடைய பதிப்பாளர் தான். புத்தகம் அதிகாரபூர்வமாய் வெளியாவதற்கு முன்னரே செய்தி எப்படியோ மீடியாவில் கசிந்தது. முன்னுரையில் இருந்து சில பத்திகளை கூட அதில் இருந்து பிரசுரித்தார்கள். அப்புறம் பற்றிக் கொள்ள என் பதிப்பாளர் பயந்து போய் அத்தனை பிரதிகளையும் அழித்து விட்டார்
இதை அவர் முதலில் செய்திருக்கலாம்.”
அவர் அதை படிக்கவில்லை. ஏதோ கதை என்று நினைத்து விட்டார் பாவம். உனக்கு ஒன்று தெரியுமா நான் என் காதலர்கள் பற்றி இதே விபரீதமாக கருதப்படுகிற விசயங்களைப் பற்றி என் கதைகளில் முன்னர் பலமுறை எழுதி இருக்கிறேன். மறைவாக இருந்ததால் ரசித்தார்கள். இந்த கடைசி புத்தகம் இருக்கிறதே அதில் சமூகம் பாவம் என நினைக்கிற அத்தனை விசயங்களையும் தரவுகளுடன் மறுக்க முடியாதபடி தர்க்கபூர்வமாக நிறுவி இருந்தேன். அது தான் அவர்களால் தாங்க முடியவில்லை. உனக்குப் பிடிக்காத ஒன்றை நான் சொல்லலாம், என்னை மடையன் கிறுக்கன் என்பாய். ஆனால் நான் அதை ஆதாரபூர்வமாக சொல்லக் கூடாது. அப்போது தான் நீ பயப்படுவாய்
இப்படி அவர் ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார். எனக்கு போர் அடித்தது. எரிச்சலாகி சொன்னேன்குழந்தைகளிடம் தப்பு பண்ணுவது மகாபாவம். அதையெல்லாம் நியாயப்படுத்தி எழுதுவது அசிங்கம்.”
லூயி அலட்சியமாக புன்னகைத்தார். வழமையான் அந்த களைப்பு அவரது அலட்சியத்தை கொஞ்சம் அழகாக்கியது.
நான் தொடர்ந்தேன்நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் எனத் தெரியும். ஆனால் நான் அப்படிப் பட்டவன் இல்லை. நான் எந்த குழந்தையிடமும் தப்பாக நடந்ததில்லை. ஒரு பெண்ணை, என் மாணவியை நேசித்தேன். காதலித்தேன். அவளுக்கு நிறைய உதவி பண்ணினேன். என் விருப்பம் எல்லாம் மனதளவில் வார்த்தை அளவில் தான். நான் அவளுக்கு எந்தவிதத்திலும் காயப்படுத்தவோ தப்பு பண்ணவோ இல்லை.”
லூயி பெருமூச்சு விட்டார். சொன்னார்நான் இதை என் நண்பர்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன். காதலிக்கிறேன், நேசிக்கிறேன் என்று. ஆனால் அதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. நான் உன் கேஸை படித்தேன். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்பில் இருந்து எடுத்த விந்துக்கறை உன்னுடையது அல்ல. ஆனால் அவளது வாயை மூட பயன்பட்ட லுங்கித் துண்டு, கை கால்களை கட்ட பயன்படுத்தின நைலான் கயிறில் உன் வியர்வை தடயம் இருக்கிறது. அவளது உறுப்பில் திணிக்கப்பட்ட மெழுகுவர்த்தி கூட நீ வாங்கினது தான் என்பதற்கு ரசீது உள்ளது. எல்லாவற்றிர்கும் மேலாக குற்றம் நடந்தது உன்னுடைய அறையில்.”
லூயி இது போல் சில சமயம் மிகத் தெளிவாக பேசுவார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் தொடர்ந்தார் உனக்கு உதவின அல்லது குற்றத்தில் சம பங்குள்ள இன்னொரு நபரை கண்டுபிடிக்க இயலவில்லை. அது மட்டும் தான் வழக்கில் ஒரே ஓட்டை. மற்றபடி நீ வசமாக மாட்டியிருக்கிறாய். அந்த மூன்று நாட்கள் வேறு இடத்தில் இருந்ததற்கு வேறு ஆலிபி உனக்கு இல்லை. அந்த பெண்ணின் அம்மா உனக்கு எதிராக முன்னர் கொடுத்த பாலியல் தொந்தரவு வழக்கு வேறு இருக்கிறது. அதுவும் வலுவான ஆதாரம். அவர் உனக்கு எதிராக சாட்சியம் அளித்திருக்கிறார். அவர் இரண்டாம் நிலை சாட்சியாக முன்வைக்கப் படுவார். உன்னுடன் பள்ளிக் கூடத்தில் வேலை பார்த்த ஆசிரியர்களில் மூன்று பேர் பக்க சாட்சிகள். தலைமையாசிரியர் உன்னை வேலை நீக்கம் செய்த உத்தரவில் உள்ள காரணங்களும் உன் ஒழுக்கமற்ற நடத்தைக்கு நல்ல ஆதாரம். நீ தப்பிக்கவே முடியாதுஅவர் தன் கண்களை மூடிக் கொண்டார்.
தப்பிச்சிருவேன்
ஆங்?” அவர் புருவங்களை தூக்கினார்.

நான் அசாத்தியமான தன்னம்பிக்கை தரும் உற்சாகத்துடன் சொன்னேன்தேவி. அவள் நினைவு திரும்பினால் போதும். நான் தப்பிச்சிருவேன்

ஆர். அபிலாஷ்

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments:

Post a Comment